மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
பாலிவுட்டின் வெள்ளிக்கிழமை நாயகன் என்று சொல்லப்படும் அளவிற்கு வருடத்திற்கு அதிக அளவிலான படங்களின் நடிப்பவர் நடிகர் அக்ஷய் குமார். இந்தியாவில் அதிக வருமானம் சம்பாதிக்கும் நடிகர்களின் முன்னணி இடத்தில் இவர் தான் இருக்கிறார். ஆனால் வருடத்திற்கு ஐந்து படங்களாவது இவர் நடித்தாலும் கூட கடந்த சில வருடங்களுக்கு மேலாக இவருக்கு என ஒரு ஹிட் படம் கூட கிடைக்கவே இல்லை. அதிலும் குறிப்பாக கடந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூரரைப்போற்று ரீமேக்கான 'சர்பிரா' படமும் இவருக்கு மிகப்பெரிய தோல்வி படமாகவே அமைந்தது.
இதனைத் தொடர்ந்து பெரும்பாலும் பல ரசிகர்களும் திரையுலகை சேர்ந்த அவரது நலம் விரும்புகிறோம் கூட எதற்காக இத்தனை படங்களில் நடிக்கிறீர்கள், வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடிக்கலாமே என்று ஆலோசனை கூறுவது உண்டு. தற்போது அக்ஷய் குமார் நடிப்பில் ராணுவ பின்னணியில் உருவாகியுள்ள 'ஸ்கை போர்ஸ்' என்கிற படம் குடியரசு தின பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 24ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிகழ்வில் அக்ஷய் குமார் பேசும்போது, “இப்படி ரசிகர்களும் தனது நலம் விரும்பிகளும் படங்களை குறைத்துக் கொள்ளுங்கள் என்று தனக்கு ஆலோசனை கூறுவதாகவும் ஆனால் ஒருபோதும் நான் அப்படி செய்யப்போவதில்லை” என்றும் ஆணித்தரமாக கூறியுள்ளார்.
“நான் இந்த சினிமாவுக்குள் தான் இருக்கிறேன் என் முழு நேர வேலையே சினிமா தான். அதை நிறுத்திவிட்டு நான் என்ன செய்யப் போகிறேன். எப்போதும் உழைத்துக் கொண்டு இருப்பது தான் என் விருப்பம். கருத்துக்களை சொல்லும் படங்களை தவிர்த்து கமர்சியலாக நடிக்கலாமே என்று சொல்கிறார்கள். சர்பிரா போன்ற படங்கள் சரியாக போகாவிட்டாலும் எனக்கு அது போன்ற படங்களிலும் நடிக்க வேண்டும். அதே சமயம் கமர்சியல் படங்களிலும் நடிப்பேன்” என்று கூறியுள்ளார். இந்த வருட துவக்கத்திலாவது இந்த ஸ்கை போர்ஸ் திரைப்படம் அக்ஷய் குமாரின் திரையுலக பயணத்தை மீண்டும் வெற்றிகரமாக துவக்கி வைக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.