காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
நடிகர் தனுஷ் தற்போது 'இட்லி கடை' எனும் புதிய படம் ஒன்றை இயக்கி, நடித்து வருகின்றார். 'டாவுன் பிக்சர்ஸ், வுன்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.
இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. அடுத்த வருடம் ஏப்ரல் 10ம் தேதி அன்று படம் திரைக்கு வருகிறது.
இதன் படப்பிடிப்பு இன்னும் மீதமுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரை இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி படக்குழு வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் தனுஷூடன் ராஜ்கிரனும் இடம் பெற்றுள்ளார்.