எனது வாழ்க்கையை வடிவமைத்த அம்மா - ஹேமமாலினி நெகிழ்ச்சி | 'சேம் சேஞ்சர்' சென்னை விழாவில் விஜய் கலந்து கொள்வாரா? | அஜித்தின் விடாமுயற்சி எப்போது ரிலீஸ்? | ''15 வருட காதல்'': ரகசியம் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ் | சத்தமின்றி திருமணம் செய்த சாக்ஷி அகர்வால் | சசிகுமார் - சிம்ரனின் ‛டூரிஸ்ட் பேமிலி' படப்பிடிப்பு முடிவடைந்தது | நேரம் சோதிக்கிறது… : வருத்தத்தில் சிலம்பரசன் | 5 வருடங்களுக்கு பிறகு கதையின் நாயகனாக ஷாம் | விடாமுயற்சி - டிரைலரை வெளியிட்டு ரசிகர்களை அமைதிப்படுத்த முயற்சி | விவேக் பிரசன்னா நாயகனாக நடிக்கும் 'ட்ராமா' |
நடிகர் அஜித் தற்போது ஒரே சமயத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு கடைசியில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் அஜித் இந்த படத்தின் டப்பிங்கை முடித்துக் கொடுத்தார். அதே சமயம் குட் பேட் அக்லி படமும் இன்னொரு பக்கம் முடிந்து விட்டது. அஜித்தின் குடும்பம் தற்போது புத்தாண்டை கொண்டாடுவதற்காக சிங்கப்பூர் கிளம்பி சென்றுள்ளனர்.
அவர்கள் சென்னை விமான நிலையத்தில் உள்ளே செல்லும் வீடியோவும் சிங்கப்பூரில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வீடியோவும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக சென்னையில் நடைபெற்ற பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்துவின் திருமண நிகழ்வில் அஜித் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.