ராஜமவுலி படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிருத்விராஜ் | பதட்டத்துடன் சிக்கந்தர் படப்பிடிப்பை நடத்திய ஏ.ஆர். முருகதாஸ் | ஆஸ்கர் விருதுக்காக நான்காவது குழந்தை பெற்றுக் கொள்ள தயார் : வீர தீர சூரன் நடிகர் புதிய லட்சியம் | என் சகோதரி நல்லா நடித்திருக்கிறாரா? - பிரித்விராஜிடம் விசாரித்த அமீர்கான் | இளையராஜாவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க பரிசீலனை? | ஆன்லைன் முன்பதிவில் சாதனை படைத்த 'எல் 2 எம்புரான்' | அடுத்த மூன்று முக்கிய வெளியீடுகளில் இசை ஜிவி பிரகாஷ்குமார் | ‛வார் 2' படத்தால் ‛கூலி' படத்திற்கு அடித்த ஜாக்பாட் | சூர்யா 45 படத்தில் படமாக்கப்பட்ட பிரமாண்ட பாடல் காட்சி | சச்சின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தில் உஸ்தாத் ஹோட்டல், பெங்களூர் டேஸ், புலி முருகன் என பல ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் கோபி சுந்தர். இது தவிர தமிழ் மற்றும் தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க படங்களில் இசையமைத்து வருகிறார். குறிப்பாக தற்போது தெலுங்கு திரையுலகில் தான் அதிக படங்களில் இசையமைத்து வருகிறார். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை விட்டு பிரிந்தவர். அதன் பிறகு நடிகர் பாலாவின் முன்னாள் மனைவியும், பின்னணி பாடகியுமான அம்ருதா சுரேஷ் என்பவர் உடன் சில வருடங்கள் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். அடிக்கடி இவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வந்தனர்.
கடந்த இரண்டு வருடங்களாகவே இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். தற்போது மயோனி என்கிற பெண்ணுடன் நெருங்கிய நட்பில் இருந்து வருகிறார் கோபி சுந்தர். இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். இதனால் சோசியல் மீடியாவில் அடிக்கடி காதல் மன்னன் என்கிற கிண்டலுக்கு ஆளாகி வருகிறார் கோபி சுந்தர்.
சமீபத்தில் இது குறித்து மனம் திறந்து பேசியுள்ள கோபி சுந்தர் கூறும்போது, “பெரும்பாலும் மக்கள் அவர்களது உண்மை முகத்தை மறைக்கவே செய்கிறார்கள். மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக நடிக்கவும் தங்களை சுருக்கிக் கொள்ளவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் நான் அதுபோன்று நடிக்க விரும்பவில்லை. நான் நானாகவே வாழ விரும்புகிறேன். என்னை வெட்கம் கெட்ட மனிதன் என்று மற்றவர்கள் அழைத்தால் அதை நான் பெருமையாக ஏற்றுக் கொள்கிறேன்.
பைபிளில் சொல்லப்பட்டுள்ளது போல உண்மை உன்னை சுதந்திரமாக வாழ வைக்கும். கடவுள் உண்மையையும் நேர்மையும் தான் விரும்புவார். அந்தவகையில் உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னைப் போல வாழ முயற்சி செய்யுங்கள். நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை. அதை முழுமையாக வாழ்வோம். மற்றவர்களையும் அவரது வாழ்க்கையை வாழ விடுவோம்” என்று தத்துவார்த்தமாக பதில் கூறியுள்ளார்.