இசை நிகழ்ச்சி ரத்து - வருத்தம் தெரிவித்த விஜய் ஆண்டனி | 2024 - பாடல்களில் ஏமாற்றிய இசையமைப்பாளர்கள் | தேவிஸ்ரீ பிரசாத் இசையில் முதல் முறையாக பாடிய தனுஷ் | சுந்தர பாண்டியன் இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி | பொங்கல் போட்டியிலிருந்து விலகும் 'வணங்கான்'? | 'இந்தியன் 3' பஞ்சாயத்து : சிக்கலில் ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' | ஜெயிலர் 2வில் தமன்னாவும் இருக்கிறார் | கவின் நடிக்கும் கிஸ் படத்திலிருந்து வெளியேறிய அனிருத்? | தோல்வியை நோக்கி 'தெறி' ஹிந்தி ரீமேக் | மீண்டும் வெளிவருகிறது 'தாம் தூம்' |
குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று பார்க்க தகுந்த படங்களை 'குடும்ப படம்' என்று குறிப்பிடுவார்கள். குடும்பமே சேர்ந்து நடித்த படத்தையும் குடும்ப படம் என்று சொல்லலாம். பிற்காலத்தில் அப்படியான படங்கள் நிறைய வந்திருக்கிறது. ஆனால் இதற்கு முன்னோடியான படம் 'காமதேனு'.
1941ம் ஆண்டு அப்போது பிரபலமாக இருந்த இயக்குனர் கே.சுப்ரமணியத்தின் தம்பி கே.விஸ்வநாதன். அப்போது அவர் தியேட்டர் நடத்திக் கொண்டிருந்தார். தனது மனைவி வத்சலாவுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை இருப்பதை கண்டுகொண்ட விஸ்வநாதன் அவரது ஆசையை தீர்த்து வைக்க ஒரு படம் தயாரிக்க விரும்பினார். இதை தன் அண்ணனிடம் சொன்னபோது அவரும் ஏற்றுக் கொண்டார். விஸ்வநாதன் கொண்டு வந்த கதைக்கு திரைக்கதை வசனம் எழுதிக் கொடுத்து அப்போது பாலிவுட்டில் பிரபலமாக இருந்த நந்லால் ஜஸ்வந்த்தாலை அந்த படத்தை இயக்க வைத்தார்.
படத்தில் கே.விஸ்வநாதன் நாயகனாக நடிக்க, அவரது மனைவி வத்சலா நாயகியாக நடித்தார். அவர்களது ஒரே மகள் பேபி சரோஜா குழந்தை நட்சத்திரமாக அதாவது அவர்களது மகளாக நடித்தார். இவர்கள் தவிர ஜி.பட்டு ஐயர், ஜி.சுப்புலட்சுமி, எம்.ஆர்.எஸ். மணி, கே.என். கமலம், எஸ்.வி. வெங்கடராமன் மற்றும் எஸ்.பாலசந்தர் உள்பட பலர் நடித்திருந்தனர்.
படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதற்கு பிறகு படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமான பேபி சரோஜா பல படங்களில் நடித்து அன்றைக்கு நாயகன், நாயகிகளுக்கு இணையான சம்பளம் பெறும் குழந்தை நட்சத்திரமாக மாறினார்.