மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

இசையமைப்பாளர் இளையராஜா பீக்கில் இருந்த காலகட்டத்தில் தான் தனது இசை பயணத்தை துவங்கினார் ஏ.ஆர் ரஹ்மான். முதல் படத்திலேயே அற்புதமான பாடல்களையும் வித்தியாசமான இசையையும் கொடுத்ததால் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் பார்வை அவர் பக்கம் திரும்பியது. இளையராஜா பிசியாக இருந்தார் என்பதும் ஏ.ஆர் ரஹ்மானின் வளர்ச்சிக்கு இன்னொரு காரணமாக அமைந்தது. அதேசமயம் ஏ.ஆர் ரஹ்மான் சினிமாவில் இசையமைப்பதற்கு முன்பாக பல இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து அவர்களது குழு நடத்தும் நிகழ்ச்சிகளில் வாசித்துக் கொண்டிருந்தார். பெரும்பாலும் ஏற்கனவே ஹிட்டான சினிமா பாடல்களை அப்படியே இசையமைப்பது தான் ஏ.ஆர் ரஹ்மான் வழக்கமாக இருந்ததாம்.
அப்படி ஒருமுறை அவர் வாசித்தபோது ஒரு குழுவில் இருந்த ஒரு கிடாரிஸ்ட் போதையில் ஏ.ஆர் ரஹ்மானிடம் ஒரு நாள், எதற்கு ஏற்கனவே வந்த ஒன்றை காப்பி அடித்துக் கொண்டிருக்கிறாய். உனக்கென தனித்துவமான ஒன்றை உருவாக்க முயற்சி செய் என்று விமர்சனம் செய்துள்ளார். ஆனால் அந்த விமர்சனம் தான் தனக்கான பாதையை தேர்ந்தெடுக்க வழிகாட்டியாக அமைந்தது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ஏ.ஆர் ரஹ்மான். அப்படி அந்த கிடாரிஸ்ட் கூறிய பிறகு இப்படி குழுக்களில் சேர்ந்து வாசிப்பதை நிறுத்திவிட்டு, சொந்தமாகவே புது வகையான இசையை உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டேன் என்று கூறியுள்ளார் ஏ.ஆர் ரஹ்மான்.