அல்லு அர்ஜுன் மீது மீண்டும் காவல்துறையில் ஒரு புகார் | குழந்தைகளுடன் ஒன்றாக திருமண நிகழ்வில் கலந்து கொண்ட சூர்யா-ஜோதிகா | விஜய் சார், உங்க முன்னாடி நாங்க குழந்தைங்கதான் - வருண் தவான் | தனுஷை நோக்கி படையெடுக்கும் புதிய பட வாய்ப்புகள் | விமர்சனங்களுக்கு மத்தியில் 100 கோடியை நெருங்கும் 'முபாசா' | கணவர், குழந்தைகளுடன் பாரிஸிற்கு சுற்றுலா சென்ற நயன்தாரா | இளம் வயதில் இரவு முழுக்க குடிப்பேன் - அமீர் கான் ஓபன் டாக் | என் பெயரை பயன்படுத்தி அரசு திட்டத்தில் மோசடி : கண்டித்த சன்னி லியோன் | மீண்டும் இணையும் அஜித் - ஆதிக் கூட்டணி | வளர்ப்பு நாய் இறப்பு: திரிஷா வருத்தம் |
கங்குவா படத்திற்கு பின் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44வது படத்தில் நடித்துள்ளார். நாயகியாக பூஜா ஹெக்டேவும், முக்கிய வேடங்களில் ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த படத்திற்கு தலைப்பு வைக்காமலேயே படப்பிடிப்பை நடத்தி முடித்தனர். தற்காலிகமாக சூர்யா 44 என்றே அழைத்து வந்தனர். இந்நிலையில் இன்று(டிச., 25) கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி இந்த படத்திற்கு 'ரெட்ரோ' என தலைப்பு வைத்துள்ளதாக அறிமுக வீடியோ உடன் அறிவித்துள்ளனர்.
2:15 நிமிடம் ஓடும் இந்த அறிமுக வீடியோவில் குளக்கரையில் சூர்யாவின் கைகளில் காப்பு உடன் கயிறு போன்ற ஒன்றை அணிவிக்கிறார் பூஜா ஹெக்டே. அவரிடத்தில், ‛‛கோபத்தை கம்மி பண்ணுகிறேன், என் அப்பா உடன் வேலை பார்ப்பதை விடுறேன், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசத்தை விட்டுறேன், சிரிக்க, சந்தோஷமாக இருக்க முயற்சிக்கிறேன், இனி காதல், பரிசுத்த காதல் மட்டும் தான்... கட் அண்ட் ரைட்டாக சொல்றேன்... இப்ப நீ சொல்லு கல்யாணம் பண்ணிக்கலாமா டி...'' என சூர்யா தெரிவிக்கிறார்.
இதை வைத்து பார்க்கையில் அப்பா உடன் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம் செய்யும் சூர்யா, பூஜா ஹெக்டேவிற்காக அதையெல்லாம் விட்டுவிட்டு காதலில் இறங்கும் கதையாக இருக்கும் என தெரிகிறது.