மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
கத்தாரில் சிக்டா விருதுகள் இந்த வருடம் டிசம்பர் 20ம் தேதி கத்தாரின் புகழ்பெற்ற கத்தார் தேசிய மாநாட்டு மையத்தில் (QNCC) பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியானது சிக்டா நிறுவனர் மற்றும் இயக்குநரான சாதிக் பாஷா மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலத்தில் உள்ள கத்தார் வாழ் ஆளுமைகளை இவ்விருதுகள் 8 பிரிவுகளில் கவுரவித்தன. மேலும் இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, தென்னிந்திய திரையுலகின் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவை பிரபல நடிகை குஷ்பூ, நகைச்சுவை நட்சத்திரம் யோகி பாபு, கன்னட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், பல்துறை திறமை கொண்ட நடிகர்கள் அசார் மற்றும் டி.எஸ்.கே, நடிகை அம்மு ராமச்சந்திரன், நடிகை சுமலதா, நடிகர் விமல், விசுவநாத், மற்றும் குணச்சித்திர நடிகர் ரியாஸ் கான் ஆகியோரின் வருகையால் நிகழ்ச்சியானது தனிச்சிறப்பை பெற்றது.
இந்த நிகழ்வில் 2500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து, விழாவை சிறப்பித்தனர். தென்னிந்தியர்களின் கலாச்சார மற்றும் கலை நடைமுறைகளைக் கொண்டாடும் சிக்டா விருதுகள், வளர்ந்து வரும் திறமைகளை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக திகழ்கிறது.