ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை படங்கள் வெளியாகி இருந்தாலும் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, சதீஸ் ஆகியோர் நடிப்பில் 2010ல் வெளியான 'தமிழ்படம்' திரைப்படத்திற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அந்த அளவிற்கு இந்த திரைப்படம் ரசிகர்களை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது. தமிழ் சினிமாவில் வந்த படங்களின் காட்சிகளை நகைச்சுவையுடன் கிண்டலடித்து கதையாக ரசிக்க வைத்ததால் வரவேற்பை பெற்றது.
இதன் 2வது பாகம் அதேபாணியில் எடுக்கப்பட்டு 2018ல் வெளியானது. இது சுமாரன வரவேற்பையே பெற்றது. ஆனாலும், மற்ற படங்களை கிண்டலடிக்கும் வகையிலான காட்சிகளை இப்படங்களில் புகுத்தியிருப்பது பலரை ரசிக்க வைத்தது. இதன் 3வது பாகம் எப்போது வெளியாகும் என இயக்குனர் சிஎஸ் அமுதனிடம் ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், 2023ல் விஜய் ஆண்டனியை வைத்து 'ரத்தம்' எனும் படத்தை இயக்கியிருந்தார்.
இந்த நிலையில், 'தமிழ்படம் 3' படம் உருவாக இருப்பதை நடிகர் சிவா உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் அவர் கூறுகையில், ''தமிழ்படம் 3 படம் குறித்து 'ஒய் நாட்' தயாரிப்பு நிறுவனத்தின் ஸ்ரீகாந்த்தை சந்தித்து பேசியுள்ளோம். கிட்டத்தட்ட 2 மணிநேரத்திற்கு மேலாக பேசி, 2025ல் தமிழ்படம் 3 எடுக்க முடிவுசெய்துள்ளோம். ஒரு கதை எழுதி படம் பண்ணுவது நார்மல். ஆனால், 100 படங்களை பார்த்து கதை எழுதுவது சவாலான விஷயம்'' எனக் கூறியுள்ளார் சிவா.