மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
எஸ்யு அருண்குமார் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விக்ரம், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'வீர தீர சூரன்'. இப்படம் அடுத்த மாதம் பொங்கலுக்குப் பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கான வியாபாரம் இப்போதே ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இப்படத்திற்கான முன்னோட்ட வீடியோதான் அதற்குக் காரணம் என்கிறார்கள். பரபரப்பான ஆக்ஷன் படமாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் டிவி உரிமை மட்டுமே 60 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாம். தமிழகத் தியேட்டர்கள் உரிமை 20 கோடிக்கும் நடந்துள்ளதாம். மற்ற மாநிலங்கள், வெளிநாட்டு உரிமை ஆகியவற்றிற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவையும் 20 கோடிக்கும் அதிகமாகவே விற்பனையாகும். இப்போதே இந்தப் படத்திற்கு 100 கோடிக்கான வியாபாரம் உறுதியாகி உள்ளது. இதன் மூலம் தயாரிப்பாளர் இப்போதே 'டேபிள் பிராபிட்' பார்த்துவிட்டார் என்கிறார்கள்.