‛பேபி ஜான்' படம் ‛தெறி' படத்தின் முழுமையான ரீமேக் அல்ல : இயக்குனர் அட்லி | ரஜினி பெரிய நடிகர் என்பதே தெரியாது: சொல்கிறார் நயன்தாரா | வெங்கட் பிரபுவா... சிவாவா... - யாரை டிக் செய்ய போகிறார் அஜித் | பிப்ரவரி மாதத்தில் துவங்கும் தனுஷ் - விக்னேஷ் ராஜா படம் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன் | ஜெய் நடிக்கும் ‛பேபி அண்ட் பேபி' | புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை : அமெரிக்கா சென்ற சிவராஜ்குமார் | அருண் விஜய்யின் அன்புக்கு தலைவணங்கிய சிவகார்த்திகேயன் | பீம்லா நாயக் புகழ் இசைக்கலைஞர் பத்மஸ்ரீ மொகிலையா காலமானார் | என்னுடன் கூட்டணி சேர்ந்த போதெல்லாம் சந்தோஷ சிவன் தேசிய விருது பெறுகிறார் : மோகன்லால் பெருமிதம் |
ரஜினிகாந்த் உடன் 'சந்திரமுகி' படத்தில் நடித்திருந்தார் நயன்தாரா. இப்படம் 800 நாட்களுக்கு மேலாக ஓடி, மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பி.வாசு இயக்கியிருந்த இப்படத்தில், பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அதன்பின்னர், 'குசேலன்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார். தொடர்ந்து 'தர்பார், அண்ணாத்த' படங்களிலும் ரஜினி - நயன்தாரா இணைந்து நடித்திருந்தனர்.
இந்த நிலையில் தனியார் ஊடகத்திற்கு நயன்தாரா அளித்த பேட்டியில், சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது: சந்திரமுகி படத்தில் எனக்கு முதல் காட்சி ரஜினி சாருடன் தான் இருந்தது. அப்போது அவர் எவ்வளவு பெரிய நடிகர் என்பது எனக்கு தெரியாது. அதுதான் எனக்கு மிகவும் உதவியது என்று நினைக்கிறேன். ஒருவேளை எனக்கு முன்பே தெரிந்திருந்தால் பயம் வந்திருக்கும். அவர்களின் பிரபலம் குறித்தும், நட்சத்திரம் என்பது குறித்தும் அறியாமல் இருப்பது எனக்கு உதவியது. இவ்வாறு அவர் பேசியிருந்தார்.
நயன்தாராவின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மட்டுமல்லாது, ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகள் வரை ரஜினிகாந்தின் புகழ் பரவியிருந்தும், அவர் உச்ச நடிகர் என்பது கூட தெரியாது என்பது போல நயன்தாரா பேசியிருப்பதற்கு சமூக வலைதளத்தில் நயன்தாராவை ரஜினி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். 'கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாங்க' என கிண்டல் அடித்து வருகின்றனர்.