செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் 'பேபி ஜான்' படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகிறார். அடுத்த வாரம் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக உள்ள இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் சில வாரங்களுக்கு முன்பே ஆரம்பமாகின. ஆனால், கீர்த்தி சுரேஷுக்குக் கடந்த வாரம் திருமணம் நடந்ததால் அவர் அவற்றில் கலந்து கொள்ளவில்லை.
திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் அவர் தற்போது புரமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார். நேற்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். சிகப்பு நிற கவுன் ஒன்றில் கிளாமராக வந்து கலந்து கொண்டார். கழுத்தில் எந்தவிதமான நகையும் அணியாமல், புதுத் தாலியை மட்டும் அவர் அணிந்து வந்தார்.
இந்தக் காலத்தில் திருமணம் முடிந்த பின் ஆடைக்குள் புதுத்தாலியை மறைத்துக் கொண்டு வேலைக்குச் செல்பவர்கள்தான் அதிகம். ஆனால், கீர்த்தி அதை எந்தவிதத்திலும் மறைக்காமல் அணிந்து வந்தது நேற்று சமூக வலைத்தளங்களில் பேசு பொருளானது.
திருமணத்திற்குப் பின்பும் கீர்த்தி சினிமாவை விட்டு விலகாமல் தொடர்ந்து நடிப்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.