பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் |

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'விடாமுயற்சி'. இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். படத்திற்காக கடைசி கட்டமாக ஐந்து நாட்கள் படப்பிடிப்பு நடத்துவதற்காக தற்போது படக்குழுவினர் தாய்லாந்து நாட்டிற்குச் சென்றுள்ளார்கள். அங்கு படப்பிடிப்பு நடத்தி முடித்ததும் மொத்த படப்பிடிப்பும் நிறைவுக்கு வருகிறதாம்.
ஏற்கெனவே படத்தின் இறுதிக் கட்டப் பணிகளை ஆங்காங்கே சம்பந்தப்பட்டவர்கள் செய்து வருகிறார்களாம். அனைத்தும் திட்டமிட்டபடி முடிந்துவிடும் என்பதுதான் தற்போதைய தகவல். வெளியீட்டிற்கு முன்பாக ஒரு டிரைலரை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இப்போதைய நிலவரப்படி பொங்கலுக்கு வேறு தமிழ்ப் படங்கள் வரத்தயங்குகிறார்களாம். அதனால், 'விடாமுயற்சி' படம் தனியாக பெரும்பாலான தியேட்டர்களில் தமிழகத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது.
'விடாமுயற்சி' வெளியீடு, வரவேற்பைப் பொறுத்தே ஜனவரி மாதத்தில் மற்ற படங்களை வெளியிட அந்தந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் திட்டமிடுகிறார்களாம்.