ராஜா சாப் படப்பிடிப்பில் பிரபாஸிற்கு காயம் : ஜப்பான் ட்ரிப் கேன்சல் | படை தலைவன் ‛ஏஐ' விஜயகாந்த் பற்றி இயக்குனர் அன்பு | ஐந்து நாட்களில் 6 முறை விமானத்தில் பயணித்த த்ரிஷா | ஓடிடியில் சாதனை படைத்த சூர்யாவின் கங்குவா | இளையராஜா பயோபிக் படம் டிராப் இல்லை | மார்க் ஆண்டனி 2ம் பாகம் உருவாகிறதா? | பாலிவுட்டில் சந்தோஷ் நாராயணன் : சல்மான் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு இசை | வைரலான த்ரிஷாவின் இன்ஸ்டா பதிவு | “இதயக்கனி”யை பறித்த இயக்குநர் வழங்கிய “வெள்ளை ரோஜா” | புது சீரியலில் கமிட்டான ஆல்யா மானசா |
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். சுதா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த 'புறநானூறு' படம்தான் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க உருவாக உள்ளது.
இப்படத்திற்கு 'புறநானூறு' என்ற தலைப்பு கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது. அந்தத் தலைப்பை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம்தான் பதிவு செய்து வைத்துள்ளதாம். அப்படத்திற்காக அவர்கள் சில பல கோடிகளை செலவு செய்துவிட்டார்களாம். ஆனால், அவை அனைத்தும் வீணாகப் போய்விட்டது. எனவே அந்தத் தலைப்பை அவர்கள் விட்டுத் தர வாய்ப்பில்லை என்கிறார்கள்.
சுதா, சிவகார்த்திகேயன் இணையும் இந்த புதிய படத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்துள்ளது. அவர்கள் கேட்டால் சூர்யா தரப்பு மறுக்க முடியாது. மனப்பூர்வமாக விட்டுக் கொடுப்பார்களா அல்லது மறுப்பார்களா என்பது விரைவில் தெரிந்துவிடும்.