ராஜா சாப் படப்பிடிப்பில் பிரபாஸிற்கு காயம் : ஜப்பான் ட்ரிப் கேன்சல் | படை தலைவன் ‛ஏஐ' விஜயகாந்த் பற்றி இயக்குனர் அன்பு | ஐந்து நாட்களில் 6 முறை விமானத்தில் பயணித்த த்ரிஷா | ஓடிடியில் சாதனை படைத்த சூர்யாவின் கங்குவா | இளையராஜா பயோபிக் படம் டிராப் இல்லை | மார்க் ஆண்டனி 2ம் பாகம் உருவாகிறதா? | பாலிவுட்டில் சந்தோஷ் நாராயணன் : சல்மான் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு இசை | வைரலான த்ரிஷாவின் இன்ஸ்டா பதிவு | “இதயக்கனி”யை பறித்த இயக்குநர் வழங்கிய “வெள்ளை ரோஜா” | புது சீரியலில் கமிட்டான ஆல்யா மானசா |
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருப்பாவை திவ்யபாசுரம் ஆன்மிக கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் திருத்தண்டி நாராயண ராமானுஜர் ஜீயர் சுவாமிகள், சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக ஆண்டாள், ரெங்மன்னாரை தரிசனம் செய்ய அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்களுடன் இளையராஜாவும் சென்றதாகவும், ஆனால் இளையராஜாவை மட்டும் வெளியில் நிற்குமாறு கோவில் பட்டர்கள் தெரிவித்து அவமதித்ததாகவும் சர்ச்சை எழுந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதி அர்த்தம் மண்டபத்தில் மடாதிபதிகள், அர்ச்சகர்கள் தவிர மற்றவர்கள் உள்ளே செல்ல கோயில் வழக்கப்படி அனுமதி இல்லை. இதுபற்றி இளையராஜாவிடம் திரிதண்டி ஜீயர் தெரிவித்தார். இளையராஜாவும் ஏற்றுக்கொண்டு அர்த்த மண்டபம் முன்பு நின்று தரிசனம் செய்தார் என மதுரை மண்டல அறநிலைத்துறை இணை கமிஷனர் செல்லத்துரை விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் இளையராஜா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‛‛என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்'' என குறிப்பிட்டுள்ளார்.