ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' |
அர்ஜுன் ரெட்டி, அனிமல் ஆகிய படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விரைவில் பிரபாஸ் 'ஸ்பிரிட்' எனும் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார். பிரபாஸின் 25வது படமாக உருவாகும் இதன் பட்ஜெட் மட்டும் ரூ. 300 கோடி என கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார் என தகவல் வந்தது. தற்போது இந்த படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிக்க மிருணாள் தாக்கூர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் இவர் முதன்முறையாக பிரபாஸ் ஜோடியாக நடிக்கிறார்.
மேலும், இந்த படத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சைப் அலி கான் மற்றும் கரீனா கபூர் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர். பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியரான இவர்கள் இந்த படத்தில் நெகட்டிவ் வேடத்தில் நடிக்கின்றனர்.