'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
'கபாலி' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. மேலும் சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். சர்ச்சைக்குரிய நடிகையாகவே வலம் வருபவர் ராதிகா ஆப்தே. 2012ம் ஆண்டில் பிரிட்டிஷ் வயலின் இசைக் கலைஞரான பெனடிக்ட் டெயிலர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
கடந்த பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த ராதிகா ஆப்தே கர்ப்பம் அடைந்தார். ஆனால், அதைப் பற்றி அவர்கள் சமூக வலைத்தளங்களில் கூட பதிவிடல்லை. தாய்மை அடைந்த வயிறுடன் காணப்பட்ட ராதிகாவைப் பார்த்ததும்தான் அது உறுதியானது.
இதனிடையே, நேற்று தன்னுடைய பெண் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “எனது மார்பில்… ஒரு வாரக் குழந்தையுடன்... குழந்தை பிறந்த பிறகு முதல் வேலை தொடர்பான மீட்டிங்” எனப் பதிவிட்டுள்ளார்.
அவருக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.