ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு |
நடிகர் ஜெயராம் மகனான காளிதாஸ் ஜெயராம், தமிழில் 'மீன் குழம்பும் மண் பானையும்', 'பூமரம்', 'ஒரு பக்க கதை', 'பாவகதைகள்' போன்ற பல படங்களில் நடித்தார். கடைசியாக தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ், மலையாளப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
காளிதாஸ் தமிழ்நாட்டை சேர்ந்த மாடலான தாரிணி களிங்கராயர் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். அதனை தொடர்ந்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் தாரணி திருமணம் கேரளா மாநிலம் குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில். குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்திருக்கிறது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று (11ம் தேதி) மாலை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. முன்னதாக நேற்று மாலை சங்கீத் நிகழ்ச்சி நடந்தது. இதில் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தது, ஆனால் அவர் கேரளா செல்வதால் நேற்று மாலை நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.