சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
நட்சத்திரத் தம்பதியினரான ஜெயராம் - பார்வதியின் மகன் காளிதாஸ் ஜெயராம். இரண்டு மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதில் “என்டே வீடு அப்புவின்டேயும்', என்ற படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதையும் பெற்றவர் காளிதாஸ்.
தமிழில் 'ஒரு பக்கக் கதை' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் வெளிவர மிகவும் தாமதமானது. அதன்பின் தமிழில் சில படங்களில் நடித்தாலும் இன்னும் முக்கிய வெற்றியைப் பெறாமல் இருக்கிறார். 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசன் மகனாக நடித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார்.
தனுஷின் 50வது படமான 'ராயன்' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் காளிதாஸ். நேற்று வெளியான படத்தின் முதல் பார்வையிலும் அவரது புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அதைப் பகிர்ந்து, “காத்திருப்பு கடைசியாக முடிவுக்கு வந்தது. எனது இதயத்திற்கு நெருக்கமான ஒரு படம் குறித்து உங்களுக்குப் பகிர்வது எனக்கு உற்சாகமாக உள்ளது. தனுஷ் சாரின் 50வது படமான, அவரே இயக்கும் 'ராயன்' படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அவரது திறமையின் அபிமானியாக இருந்து அவருடன் நடிக்கிறேன். கனவு நனவானது. ராயன் உலகத்தில் குதிப்போம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், நித்யா மேனன், அபர்ணா பாலமுரளி, அனிகா சுரேந்திரன், செல்வராகவன், வரலட்சுமி ஆகியோரும் நடித்துள்ளார்கள். ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.