வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் ‛விடாமுயற்சி'. இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இறுதி கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானபோது இப்படம் 1997ல் ஹாலிவுட்டில் வெளியான ‛பிரேக் டவுன்' என்ற படத்தின் ரீமேக் என்று ஒரு செய்தி வெளியானது. அதையடுத்து ‛பிரேக் டவுன்' பட நிறுவனத்திடம் அனுமதி பெறாமலேயே அந்த படத்தின் கதையை ரீமேக் செய்துவிட்டதாக சொல்லி அந்த ஹாலிவுட் பட குழுவில் இருந்து ‛விடாமுயற்சி' படக் குழுவுக்கு 150 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக ஒரு தகவல் பரவி வந்தது.
இந்த நிலையில் இது குறித்து ‛விடாமுயற்சி' படக் குழு வட்டாரத்தை அணுகி விசாரித்த போது, அப்படி எல்லாம் யாரும் எங்களுக்கு எந்த நோட்டீஸும் அனுப்பவில்லை என்கிறார்கள். அதோடு ‛பிரேக் டவுன்' படத்தின் கதைக்கும் விடாமுயற்சி கதைக்கும் சம்பந்தமில்லை. யாரோ திட்டமிட்டு இப்படி ஒரு வதந்தியை பரப்புகிறார்கள். ஏற்கனவே அறிவித்தபடி ஜனவரி 10ம் தேதி விடாமுயற்சி கண்டிப்பாக திரைக்கு வரும் என்று கூறுகிறார்கள்.