செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
காதலித்து திருமணம் செய்து கொண்ட அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நட்சத்திர தம்பதிக்கு ஆரத்யா என்ற மகள் இருக்கிறார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக சோசியல் மீடியாவில் ஒரு வதந்தி பரவி வந்தது. குறிப்பாக, ஆனந்த் அம்பானி திருமணத்தில் ஐஸ்வர்யாராயும், அபிஷேக் பட்சனும் தனித்தனியே கலந்து கொண்டதால் அந்த வதந்தி மேலும் காட்டுத்தீயாக பரவியது. ஆனபோதிலும் அதற்கு அவர்கள் தொடர்ந்து மறுத்து வந்தார்கள்.
இப்படியான நிலையில்தான் கடந்த ஐந்தாம் தேதி மும்பையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் ஜோடியாக கலந்து கொண்டுள்ளார்கள். அப்போது தங்களது குடும்பத்தாருடன் செல்பி எடுத்துள்ளார் ஐஸ்வர்யாராய். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி அவர்களின் விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.