மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

களத்தில் சந்திப்போம் பட இயக்குனர் என்.ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள படம் ' மிஸ் யூ'. ஆஷிகா ரங்கநாத் ,சஸ்டிக்கா ராஜேந்திரன், பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். காதல் கதையில் உருவாகி உள்ள இந்த படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் என்கிற புதிய நிறுவனம் தயாரித்துள்ளனர். தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகின்றனர்.
ஏற்கனவே கடந்த நவம்பர் 29ம் தேதி அன்று திரைக்கு வருவதாக இருந்தது இப்படம் தமிழகத்தில் கன மழை எதிரொலியால் தள்ளிப்போவதாக அறிவித்தனர். இந்த நிலையில் மிஸ் யூ திரைப்படம் வருகின்ற டிசம்பர் 13ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.




