விடாமுயற்சி டிரைலர் வெளியானது ; ஆக்ஷனில் அதகளம் பண்ணும் அஜித் : பிப்., 6ல் படம் ரிலீஸ் | ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் திஷா பதானி | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | சைந்தவி உடன் இணைந்து பணியாற்றுவது ஏன்? - ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில் | இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்கும் அமீர்கான்? | விஜய்க்கு சொன்ன மூன்று கதை : மகிழ் திருமேனி | சூப்பர் ஹீரோ கதையில் சூர்யா | ஸ்ருதிஹாசன் குரலில் வெளிவந்த டிரெயின் முன்னோட்டம் | டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 10 வருட பயணத்தை நினைவுகூர்ந்த ஆதி |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ள தெலுங்குப் படமான 'புஷ்பா 2', நாளை டிசம்பர் 5ம் தேதி பான் இந்தியா படமாக 6 மொழிகளில் வெளியாகிறது.
இப்படம் முன்பதிவில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்பதிவில் மட்டும் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. இதுவரை எந்த ஒரு இந்தியத் திரைப்படமும் இந்த சாதனையைப் புரிந்ததில்லை.
பாலிவுட்டில் பிரபலமான ஹீரோக்களான ஷாரூக், சல்மான் ஆகியோர் படங்களுக்குக் கூட இப்படி ஒரு சாதனை நிகழ்ந்ததில்லை. பான் இந்தியா என பிரபலமான பிரபாஸ் படத்திற்கும், தமிழில் சூப்பர்ஸ்டார் என்றழைக்கப்படும் ரஜினிகாந்த் படத்திற்கும் கூட இப்படி முன்பதிவு கிடைத்ததில்லை.
நாளைய முதல் நாள் வசூலாகவும் இந்தப் படம் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் நன்றாக அமையும் பட்சத்தில் 1000 கோடி வசூல் என்பது விரைவில் நிகழவும் வாய்ப்புள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.