தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

மலையாளத்தில் 80 காலகட்டத்தில் இருந்து தற்போது வரை மலையாள சினிமாவில் கலக்கி வரும் நடிகர் இந்திரன்ஸ். மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முக்கிய நடிகர்களின் படங்களில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் மலையாள சினிமாவில் பெரிதளவில் பேசப்பட்ட படங்களான 2018, ஹோம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.
தமிழில் ஆடும் கூத்து, நண்பன் என இரு படங்களில் மட்டும் நடித்துள்ளார். தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கவுள்ளார் இந்திரன்ஸ். அதன்படி, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யாவின் 45வது படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஏற்கனவே த்ரிஷா, சுவாசிகா, நட்ராஜ் ஆகியோரை தொடர்ந்து இப்போது இந்திரன்ஸ் இணைந்துள்ளார் என்கிறார்கள்.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். இதன் படப்பிடிப்பு கோவையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




