ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
பாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதி அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய். இவர்களுக்கு 13 வயது ஆரத்யா பச்சன் என்கிற பெண் குழந்தை இருக்கிறது. சமீப வருடங்களாகவே ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு என்றும் இவர்கள் இருவரும் விவகாரத்து பெற்று பிரியப் போகிறார்கள் என்றும் அவ்வபோது செய்திகள் அடிபடுவதும் பிறகு இருவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டு அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் தொடர்கதையாக இருக்கிறது.
அப்படித்தான் சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தன் பெயருடன் இணைந்து இருக்கும் பச்சன் என்கிற வார்த்தையை நீக்கி விட்டார் என்றும் அதனால் மீண்டும் கணவன் மனைவி இருவரும் விவாகரத்தை நோக்கி நகர்கிறார்கள் என்றும் கூட புதிய வதந்தி ஒன்று கிளம்பியது. இதுபோன்று பல நட்சத்திர தம்பதிகள் இப்படி தங்களின் பெயரின் பின்னால் உள்ள கணவனின் பெயரையோ அல்லது அவரது குடும்பத்தின் பெயரையோ நீக்கிய பின்பு அப்படி அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்ததும் திரையுலகில் நடந்துதான் இருக்கிறது.
அதனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஐஸ்வர்யா ராய் விஷயத்திலும் அது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் தனது மகளின் 13வது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் தம்பதியினர். ஆனால் ஐஸ்வர்யா ராய் இந்த நிகழ்வு குறித்து பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் எதிலுமே அபிஷேக் பச்சன் இடம்பெறவில்லை. இதனால் ஏற்கனவே பரவி வந்த வதந்தி உண்மைதான் என்பது போலவும் பேசத் துவங்கி விட்டனர்.
ஆனால் நல்ல வேலையாக தொடர்ந்து ஆரத்யா பச்சனின் பிறந்த நாள் நிகழ்வை பதிமூன்று வருடங்களாக நடத்தி வரும் தனியார் நிறுவனம் தாங்கள் இந்த நிகழ்வு குறித்து தங்களது வலைதள பக்கத்தில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டு இருந்தனர். அந்த இரண்டு வீடியோக்களிலுமே அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உடன் சேர்ந்து தனது மகளின் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய காட்சிகள் இடம் பெற்று இருந்தன. ஒரு வழியாக தற்போது இந்த வதந்தியும் முடிவுக்கு வந்துள்ளது என இந்த இருவர் மீதும் அபிமானம் கொண்ட ரசிகர்கள் பெருமூச்சு விடுகின்றனர்.