செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ‛நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட' என்ற பாடலில் அவருடன் இணைந்து சிறிது நேரம் நடனமாடி இருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் லைகா நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக போகிறார். இந்த படத்தில் நடிப்பதற்கு பல்வேறு நடிகர்களிடத்தில் கதை சொல்லி வந்த ஜேசன் சஞ்சய் தற்போது மாநகரம் சந்தீப் கிஷனிடம் கதை சொல்லி ஓகே செய்திருக்கிறார். இந்த படத்தின் பணிகள் ஜனவரி மாதம் முதல் தொடங்கப் போகிறது.
இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது ஒரு பேட்டியில் ஜேசன் சஞ்சய் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் சந்தீப் கிஷன். அவர் கூறுகையில், தனுஷ் இயக்கத்தில் ராயன் படத்தில் நடிப்பதற்கு முன்பே என்னை சந்தித்து கதை சொன்னார் ஜேசன் சஞ்சய். இந்த படம் அதிரடியான ஆக்சன் கதையில் உருவானபோதும் காமெடியும் கலந்த என்டர்டைன்மென்ட் படமாக இருக்கும். இந்த படத்தின் கதையை கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் என்னிடத்தில் சொன்னார் ஜேசன் சஞ்சய். குறிப்பாக, சீன் பை சீன் மிகச் சிறப்பாக என்னிடத்தில் அவர் கதையை விளக்கினார். அதனால் படத்தையும் மிகச் சிறப்பாக இயக்கி முதல் படத்திலேயே முக்கிய இயக்குனராக அவர் முத்திரை பதிப்பார் என்பது தெரிந்தது. அவர் சொன்ன கதை மீதும், அவர் மீதும் எனக்கு பெரிய நம்பிக்கையை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார் சந்தீப் கிஷன்.