தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

விக்ரம் நடிப்பில் இந்தாண்டு அதிக எதிர்பார்ப்புடன் வெளியான ‛தங்கலான்' படம் வரவேற்பை பெறவில்லை. தற்போது அருண்குமார் இயக்கத்தில் 'வீர தீர சூரன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். இதையடுத்து மடோன் அஸ்வின், ராம்குமார் பாலகிருஷ்ணன் போன்ற இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் மகிழ்திருமேனி சமீபத்தில் விக்ரமை சந்தித்து புதிய படத்திற்கான கதையை கூறியுள்ளார். இப்போது இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்கிறார்கள்.
அஜித்தை வைத்து நீண்டகாலமாக விடாமுயற்சி படத்தை இயக்கி வருகிறார் மகிழ்திருமேனி. இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் இன்னும் ஓரிரு விடுபட்ட காட்சிகள் மட்டும் படமாக உள்ளதாம். அதோடு தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடந்து வருகின்றன. இந்தப்படம் வெளியான பிறகு விக்ரம் படத்திற்கான பணிகளை அவர் மேற்கொள்ள உள்ளார்.




