'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! |

2021ம் ஆண்டில் மகா சமுத்திரம் என்ற படத்தில் சித்தார்த் - அதிதி ராவ் ஆகிய இருவரும் இணைந்து நடித்தார்கள். அப்போது அவர்களுக்கிடையே காதல் உருவாகி சில ஆண்டுகளாக டேட்டிங் செய்துவந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் தெலுங்கானாவில் உள்ள ஒரு கோவிலில் அவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் அவர்கள் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சித்தார்த்தும், அதிதி ராவ்வும் சேர்ந்து ராஜஸ்தானில் போட்டோஷூட் நடத்தியுள்ளனர். அந்த புகைப்படங்களை தங்கள் இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இருவரும், 'வாழ்க்கையில் மிக முக்கியமானது ஒருவரை ஒருவர் தாங்கி பிடிப்பதே' எனப் பதிவிட்டுள்ளனர். சிலர், இந்த புகைப்படங்கள் ராஜஸ்தானில் உள்ள அலியா என்ற கோட்டையில் ஹிந்து முறைப்படி இருவரும் 2வது முறையாக திருமணம் செய்தபோது எடுத்தது என கூறி வருகின்றனர். எது உண்மை என்பது அவர்களே கூறினால் மட்டுமே தெரியவரும்.



