ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
என்.ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள படம் ' மிஸ் யூ'. ஆஷிகா ரங்கநாத், சஸ்டிக்கா ராஜேந்திரன், பால சரவணன், லொல்லு சபா மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 7 மைல்ஸ் பெர் செகண்ட் என்கிற புதிய நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகின்றனர்.
இத்திரைப்படம் நாளை நவம்பர் 29ந் தேதி அன்று திரைக்கு வருகிறது என ஏற்கனவே அறிவித்தனர். தற்போது தமிழகத்தில் கன மழை எதிரொலியால் மிஸ் யூ தள்ளிப்போவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, "அரசு விடுத்துள்ள புயல் எச்சரிக்கை காரணமாகவும், மக்களின் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொண்டும், 'மிஸ் யூ' திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். புதிய வெளியீட்டுத் தேதியை விரைவில் அறிவிக்கப்படும். உங்களின் புரிதலும் ஆதரவும் எப்போதும் போல் நிலைத்திருக்க வேண்டுகிறோம்" என குறிப்பிட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் தகவல்படி இந்தபடம் அடுத்தவாரம் வெளியாகும் என தெரிகிறது.