டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

கன்னடத் திரையுலகத்தில் 2021ல் திரைப்படம் தயாரிக்க வந்து தற்போது விஜய்யின் 69வது படத்தைத் தமிழில் தயாரித்துக் கொண்டிருக்கும் நிறுவனம் கேவிஎன் புரொடக்ஷன்ஸ். “சாகத், பை 2 லவ், கேடி - த டெவில்” ஆகிய படங்களை கன்னடத்தில் தயாரித்துள்ளார்கள். அடுத்து 'கேஜிஎப்' யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படத்தை கன்னடத்தில் தயாரித்து வருகிறார்கள்.
இந்நிறுவனம் தமிழ் மற்றும் தெலுங்கில் உள்ள சில முன்னணி நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிகிறது. அடுத்தடுத்து அவர்களை வைத்து புதிய படங்களைத் தயாரிக்க உள்ளார்களாம்.
கன்னடத்தில் “முப்டி, பைரதி ரணகல்” ஆகிய படங்களை இயக்கிய நார்தன் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவருடைய அடுத்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறது என்றும் அதில் நாயகனாக நடிக்க ராம் சரண், சூர்யா அல்லது கன்னட ஹீரோ என யாரை நடிக்க வைக்கப் போகிறோம் என்பதற்கான ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அந்நிறுவனத்தின் படம் ஒன்றில் நடிக்க சூர்யா அட்வான்ஸ் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
'கேஜிஎப்' படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத் தயாரிப்பில் இரண்டு வருடங்களுக்கு முன்பே சூர்யா நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், இரண்டு வருடங்களாகியும் அது இன்னும் நடக்கவில்லை.
சூர்யாவின் 45வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு நடக்க ஆரம்பித்த பின்புதான் சூர்யாவின் 46வது படம் எது எனத் தெரிய வரும். ஏற்கெனவே 'வாடிவாசல்' படமும் அறிவிப்போடு அப்படியே இருக்கிறது.