விடாமுயற்சி டிரைலர் வெளியானது ; ஆக்ஷனில் அதகளம் பண்ணும் அஜித் : பிப்., 6ல் படம் ரிலீஸ் | ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் திஷா பதானி | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | சைந்தவி உடன் இணைந்து பணியாற்றுவது ஏன்? - ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில் | இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்கும் அமீர்கான்? | விஜய்க்கு சொன்ன மூன்று கதை : மகிழ் திருமேனி | சூப்பர் ஹீரோ கதையில் சூர்யா | ஸ்ருதிஹாசன் குரலில் வெளிவந்த டிரெயின் முன்னோட்டம் | டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 10 வருட பயணத்தை நினைவுகூர்ந்த ஆதி |
மக்கள் திலகம் எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாவின் நூற்றாண்டு விழா அதிமுகவினரால் நேற்று இரவு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதேசமயம் நேரில் கலந்து கொள்ள முடியாத நடிகர் ரஜினிகாந்த் ஒரு வீடியோ மூலமாக ஜானகி அம்மையாருடனான தனது சந்திப்பு, அனுபவங்கள் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, “ஜானகி அம்மாவை மூன்று முறை சந்தித்துள்ளேன். எம்ஜிஆர் மறைந்த பிறகு ஜானகி அம்மாவும் அரசியலில் இருந்து ஒதுங்கிய ஒரு காலகட்டத்தில் ராமாவரம் எம்ஜிஆர் வீட்டின் அருகே அருகே படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது ஜானகி அம்மா என்னை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார்கள். நானும் நேரில் சென்று அவரை சந்தித்தேன். அப்போது அவர் கையாலேயே எனக்கு காபி போட்டு கொடுத்தார். ராகவேந்திரா படம் வெளியான போது அதை எம்ஜிஆர் பார்த்து விட்டு 15 நிமிடம் உங்களைப் பற்றியே ரசித்து பேசிக் கொண்டிருந்தார் என்றும் கூறினார்.
ரஜினி எப்படி இவ்வளவு சாந்தமாக, அமைதியாக, அழகாக நடித்திருக்கிறார். பார்க்கவே நன்றாக இருக்கிறது. ஆனால் பல படங்களில் சிகரெட் பிடிக்கும் விதமாக நடிக்கிறார். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களும் அதை பார்த்து அந்த பழக்கத்தை தொடர்கிறார்களே.. இதை ரஜினி விட்டுவிட்டால் நன்றாக இருக்கும். நானும் நேரம் கிடைக்கும்போது அவரிடம் சொல்ல முயற்சிக்கிறேன் என்று எம்ஜிஆர் தன்னிடம் அந்த சமயத்தில் கூறியதாக ஜானகி அம்மா என்னிடம் கூறினார்” என்று இந்த வீடியோவில் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
எம்ஜிஆர், ரஜினி இருவருக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக பலர் வதந்திகளை பரப்பி வந்த நிலையில் ரஜினி மீது எம்ஜிஆர் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தார் என்பது ஜானகி அம்மா மூலமாக ரஜினி தெரிந்து கொண்ட இந்த நிகழ்வின் மூலமும் ரஜினி அதை வெளிப்படையாக சொன்னதன் மூலமும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அரசியலுக்கு வந்திருந்தால் எல்லாவற்றையும் இழந்திருப்பேன்
மேலும் ரஜினி கூறுகையில், 'நான் 2017ல் அரசியலுக்கு வருவேன்' என்று சொன்னேன். அப்போது நிறைய பேர் என்னை சந்தித்து ஆலோசனை சொல்ல வந்தார்கள். அந்த ஆலோசனைகளை கேட்டிருந்தால் அவ்வளவுதான் எல்லாவற்றையும் இழந்து, நிம்மதியையும் இழந்திருப்பேன்.
ஜானகி அம்மாள் யாருடைய ஆலோசனையையும் கேட்காமல் அவரே முடிவு எடுத்து ஜெயலலிதாவை அழைத்து இந்த அரசியல் எனக்கு சரிபட்டு வராது. அதற்கு நீங்கள்தான் சரி. உங்களிடம் திறமை, தைரியம், பக்குவம் இருக்கிறது. எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சியை இன்னும் முன்னுக்கு கொண்டு வருவதற்கு உங்களால்தான் முடியும். அது என்னால் முடியாது. எங்கே கையெழுத்து போட வேண்டும் என்று கேட்டு கையெழுத்து போட்டார்.
'இரட்டை இலை' சின்னத்தை மீட்டு ஜெயலலிதாவிடம் ஒப்படைத்து, அரசியலில் இருந்து ஒதுங்கி கொண்டார். இது எவ்வளவு பெரிய குணம். அவருக்கு விமரிசையாக நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ள எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள், வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசியுள்ளார்.