மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் அடுத்த மாதம் டிசம்பர் 5ம் தேதி வெளிவர உள்ள படம் 'புஷ்பா 2'. இப்படத்தின் டிரைலர் கடந்த ஞாயிறன்று நவம்பர் 17ம் தேதி தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியானது. 24 மணி நேரத்தில் தெலுங்கில் அதிகப் பார்வைகளைப் பெற்ற டிரைலராக இப்படம் புதிய சாதனையைப் படைத்தது.
இருந்தாலும் தெலுங்கை விடவும் ஹிந்தியில் இந்த டிரைலருக்கு அதிகமான வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்கு டிரைலருக்கு 60 மில்லியன் பார்வைகளும், ஹிந்தி டிரைலருக்கு 75 மில்லியன் பார்வைகளும் கிடைத்துள்ளது. மற்ற மொழி டிரைலர்களின் பார்வைகளையும் சேர்த்து 150 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. மற்ற மொழிகளில் தமிழ் டிரைலருக்கு 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளது. கன்னடம், மலையாளம், பெங்காலி ஆகியவை அதற்குப் பின்னால் உள்ளன.
டிரைலருக்குக் கிடைத்துள்ள வரவேற்பைப் பார்க்கும் போது இப்படம் தெலுங்கில் மற்றுமொரு 1000 கோடி வசூல் படமாக இருக்கும் என எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.