'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கேரளா அரசால் அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி, மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. அதன்பிறகு பல நடிகைகள், மலையாள நடிகர்கள் மீது துணிச்சலுடன் பாலியல் புகார் அளித்தனர். அதில் முக்கிமானவர் கவர்ச்சி நடிகை மினு முனீர். இவர் முன்னணி நடிகர்களான ஜெயசூர்யா, இடைவேள பாபு, மணியன் பிள்ளை ராஜு மற்றும் முகேஷ் ஆகியோர் மீது பாலியல் புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் தான் கொடுத்த அத்தனை பாலியல் புகார்களையும் வாபஸ் வாங்குவதாக அறிவித்துள்ளார் மினு முனீர். இதுகுறித்து அவர் கூறியதாவது: நடிகர்கள் மீது நான் கொடுத்த புகார் தொடர்பாக கேரள அரசு முறையாக விசாரணை நடத்தவில்லை. விசாரணைக்கு அரசு எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. இதனால் நான் அளித்த பாலியல் புகார்களை வாபஸ் பெறுகிறேன். என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்த புகார் வாபஸை போலீசார் ஏற்கவில்லை. வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது அங்கு முறைப்படி எழுத்துபூர்வமாகத்தான் புகாரை வாபஸ் பெற முடியும். வாபஸ் வாங்குவதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடிகை மினு முனீர் சினிமா வாய்ப்பு கேட்டு வந்த தன்னுடைய உறவினரின் 14 வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அவர் மீது புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது... தான் புகார் அளித்த நடிகர்களின் திட்டமிட்ட சதி என்று கருதும் மினு முனீர், இனி அவர்களை எதிர்த்து போராட முடியாது என்பதாலேயே வாபஸ் முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.