ஓவர் பில்டப் வேண்டாம் - கார்த்திக் சுப்பராஜ்க்கு சூர்யா போட்ட கண்டிஷன்! | லக்கி பொண்ணுங்க நான்! 'நந்தன்' நாயகி சுருதி | பெருங்களத்தூர் பாலத்தில் இருந்து குதித்த சிவகார்த்திகேயன்! | உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்திற்கு மாறிய அஞ்சலி! | நெகட்டிவ் விமர்சனத்தால் வேகமாக சரிந்த கங்குவா படத்தின் வசூல்! | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தின் வித்தியாசமான யோசனையில் விளைந்த “விகடயோகி” | அமரன் படத்திற்காக படமாக்கிய காமெடி காட்சிகளை நீக்கிய ராஜ்குமார் பெரியசாமி! | தனுஷ் எப்படி நன்றி மறந்தார் ? தீயாய் பரவும் வீடியோ | பாலியல் துன்புறுத்தல் எதிர்கொண்ட விஜய் ஆண்டனி பட நடிகை! | விடுதலை 2ம் பாகத்திலும் பாடியுள்ள தனுஷ்! |
கும்பகோணத்தில் வழக்குரைஞராக வாழ்க்கையைத் தொடங்கி, பின் திரைப்படத்துறையின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக சென்னைக்குப் புலம் பெயர்ந்து, தமிழ் திரைப்பட முன்னோடி இயக்குனர்களில் ஒருவராக அறியப்பட்ட ராஜா சாண்டோவிடம், அவர் இயக்கிய சில ஊமை திரைப்படங்களில் துணை இயக்குநராக ஆரம்ப காலங்களில் பணிபுரிந்து, அதன்பின் ஏ எல் ஆர் எம் அழகப்ப செட்டியார் என்பவர் பேசும்படம் ஒன்றைத் தயாரிக்க முற்பட்டபோது, அப்படத்தினை இயக்கும் வாய்ப்பினைப் பெற்றார் இயக்குநர் கே சுப்ரமணியம்.
அதன்படி பிரபல மேடை நாடகமான “பவளக்கொடி” நாடகத்தை திரைப்படமாக்க முடிவு செய்தார் கே சுப்ரமணியம். தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான எம் கே தியாகராஜ பாகவதரை வெள்ளித்திரை நாயகனாக இத்திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்துவைத்ததோடு, நடிகை எஸ் டி சுப்புலக்ஷ்மியையும் இத்திரைப்படத்தின் வாயிலாக அறிமுகம் செய்து வைத்த பெருமைக்கும் உரியவரானார் இயக்குநர் கே சுப்ரமணியம்.
அக்காலத்து ஜாம்பவான் இயக்குநராக அறியப்பட்ட இயக்குநர் கே சுப்ரமணியம், முன்பு தனது இயக்கத்தில் எம் கே தியாகராஜ பாகவதர் நடித்துப் பாடிய பாடல் ஒன்று பதிவாகி அவரது கைவசம் இருக்க, அப்பாடலை தான் இயக்கப் போகும் வேறொரு படத்தில் பயன்படுத்தினால் புதுமையாக இருக்கும் என்று யோசித்த கே சுப்ரமணியம், வேலப்பன் நாயர் எழுதிய கதையான “விகடயோகி” என்ற கதைக்கு வசனம் எழுதி, படத்தை இயக்கியிருந்தார் கே சுப்ரமணியம்.
படத்தில் டாக்டர் ஒருவர் ஒரு மருந்தைக் கண்டுபிடிக்கின்றார். அந்த மருந்தை அருந்தியவனுக்கு பல குரலில் பேசவும், பாடவும் வருவதுபோல் படத்தில் காட்சிகள் வருகின்றது. நேரு மாதிரியும், காந்திஜி மாதிரியும் பேசிக் காட்டுகின்றான். அதேபோல் ஒரு காட்சியில் எம் கே தியாகராஜ பாகவதர் போல் பாட்டுப் பாடவும் செய்கின்றான்.
எம் கே தியாகராஜ பாகவதர் சிறையில் இருந்த நேரத்தில், இவர் கைவசம் வைத்திருந்த “முகுந்தனே எந்தன் மைந்தனே” என்று பாகவதர் பாடிய அந்தப் பாடலை, அந்தக் குறிப்பிட்ட காட்சிக்குப் பயன்படுத்தியிருந்தார் இயக்குநர் கே சுப்ரமணியம். பி யு சின்னப்பா, டி ஆர் ராஜகுமாரி, பி எஸ் சரோஜா, எஸ் எம் குமரேசன், டி எஸ் தமயந்தி, டி ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்த “விகடயோகி” திரைப்படம் 1946ம் ஆண்டு வெளிவந்தது. பலகுரல் வித்தகனாய் படத்தில் தோன்றி நடித்திருந்தவர் டி கே கோவிந்தன்.