ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. நாளை(நவ., 17) இப்படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது, படம் அடுத்த மாதம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகிறது.
இப்படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையமைக்கும் வேலைகளில் அவர் சரி வர கவனம் செலுத்தாமல் ஐதராபாத்தில் நடைபெற்ற அவரது இசை நிகழ்ச்சிகளில் அதிகம் கவனம் செலுத்தியதாக சொல்லப்பட்டது. அதனால், படத்தின் இயக்குனர் சுகுமார், அல்லு அர்ஜுன் ஆகியோர் பின்னணி இசையமைக்கும் வேலைகளுக்காக நான்கு இசையமைப்பாளர்களை பணியில் அமர்த்தியுள்ளதாகத் தகவல் வெளியானது.
'புஷ்பா 2' படத்திற்கு தான் பின்னணி இசையமைப்பதாக கடந்த வாரம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது பேசியிருந்தார் தமன். நேற்று 'டாக்கு மகாராஜ்' படத்தின் டீசர் வெளியீட்டு விழாவின் போது அவர் பேசுகையில், “நான் 'புஷ்பா 2' படத்தில் ஒரு சிறு பகுதிக்காக இசையமைக்கிறேன். சில இசையமைப்பாளர்கள் இப்படத்திற்காக பின்னணி இசையமைத்து வருகிறார்கள். இயக்குனரும், நாயகனும் எனது வேலையைப் பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இப்படத்திற்கான பின்னணி இசை வேலைகளில் தமன் தவிர, சாம் சிஎஸ், அஜனீஷ் லோகநாத் மற்றும் ஒரு இசையமைப்பாளர் ஈடுபட்டுள்ளனர். இன்று அல்லது நாளை இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.