அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இதே நாளில் நீரிழிவு தினமும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், நண்பர்களே நான் முக்கியமான ஒன்றைப் பற்றி பேச விரும்புகிறேன்.
நீரழிவு மற்றும் உங்கள் கண்கள். நீங்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கிறீர்கள் என்றால் இது ரத்த சர்க்கரையை நிர்வகிப்பது மட்டுமல்ல, நீரழிவு நோயானது நீரிழிவு ரெட்டினோபதிக்கு வழிவகுக்கும். இது கடுமையான பார்வை பிரச்னைகளை ஏற்படுத்தும். குருட்டுத் தன்மையையும் கூட ஏற்படுத்தும். ஆனால் இதோ ஒரு நல்ல செய்தி.
வழக்கமாக கண் பரிசோதனைகள் மூலம் நீரிழிவு ரெட்டினோபதியை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உங்கள் பார்வையை பாதுகாக்க உதவலாம். நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு தினம் என்பதால் கண் பரிசோதனைக்கு நேரம் ஒதுக்குமாறு உங்களை ஊக்குவிக்கிறேன். உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் அல்லது யாரையாவது அறிந்திருந்தால் உங்கள் பார்வையை பாதுகாக்க நடவடிக்கையை எடுக்கவும். ஒரு எளிய வருடாந்திர கண் பரிசோதனை அனைத்து வித்தியாசத்தையும் ஏற்படுத்தும். இந்த செய்தியை பரப்பி ஒளிமயமான எதிர்காலத்தை காண அனைவருக்கும் உதவுவோம் நன்றி என அந்த பதிவில் ஏ. ஆர். ரஹ்மான் தெரிவித்திருக்கிறார்.