விஜய் 69: அமெரிக்கா வினியோக உரிமை விலை 25 கோடி? | 200ஐக் கடந்தது 2024ல் வெளியான திரைப்படங்கள்… | அன்று 'மொத்த வித்தை', இன்று '2000 கோடி' - சூர்யாவுக்கான சறுக்கல்கள் | வட இந்தியாவில் நிகழ்ச்சி - 'கேம் சேஞ்சர்'ஐத் தொடர்ந்து 'புஷ்பா 2' | 'கங்குவா' இரைச்சல் சத்தம், ரசூல் பூக்குட்டி 'கமெண்ட்' | கங்குவா - 'கேமியோ'வாக வந்த கார்த்தி பெயர் இரண்டாவது இடத்தில்… | வளர்ப்பு மகள் மீது 50 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து நடிகை | புதுப்படத்தில் கமிட்டான ரோஷினி ஹரிப்பிரியன்! | பத்து வருடங்களுக்கு முன்பே அமரனுடன் நட்பு பாராட்டிய பிரித்விராஜ் | குழந்தைகள் தினம் கொண்டாடிய மம்முட்டி |
எச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிக்கும் அவரது கடைசி படமான 69வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது. அதே சமயம் படத்திற்கான வியாபார பேச்சுவார்த்தைகளும் நடந்து வருவதாகத் தகவல். பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் அமெரிக்க வினியோக உரிமை விலை 25 கோடி ரூபாய் என அமெரிக்கா வினியோகஸ்தர் ஒருவர் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும் தனது தியேட்டரில் படம் வரும் போது பார்த்துக் கொள்கிறேன். அவ்வளவு தொகையைக் கேட்டதும் தனக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது. அடுத்த வாரம் யாரோ ஒருவர் இந்த வியாபாரத்தை முடித்துக் கொள்வார். வாழ்த்துகள்,” என்றும் பதிவிட்டுள்ளார்.
அவ்வளவு தொகை கொடுத்து படத்தை வாங்கினால் சுமார் 60 கோடி வசூலை மொத்தமாக வசூலித்தால் மட்டுமே படத்தின் உரிமை விலையை மீட்க முடியும் என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு அந்த வினியோகஸ்தர் பதிலளித்துள்ளார்.
விஜய் 69 படத்தின் வியாபார விலை, விஜய்யின் முந்தைய படமான 'தி கோட்' படத்தை விடவும் அதிகமாகக் கேட்கப்படுவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.