மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் புஷ்பா 2 . மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் வருகின்ற டிசம்பர் 5ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. தற்போது இப்படத்தின் மீதமுள்ள ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளனர். முதலாவதாக ராஷ்மிகா சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
டப்பிங் பேசிய போட்டோவை பகிர்ந்து, ‛‛புஷ்பா 2 படத்தின் முதல்பாதி டப்பிங் முடிந்து, இரண்டாவது பாதி டப்பிங் பணி நடக்கிறது. முதல்பாதியை விட இரண்டாம் பாதி பிரமாதமாக உள்ளது. என் வாழ்வில் சிறந்த அனுபவம் இந்தப்படம். என் முகம் இப்படி சோகமாக இருக்க காரணம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதே என்பது தான்'' என குறிப்பிட்டுள்ளார் ராஷ்மிகா.