ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் |
'கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர்' ஆகிய படங்களை இயக்கியவர் நெல்சன். அவர் இயக்கிய கடைசி இரண்டு படங்களுக்காக, முதலில் இயக்கிய இரண்டு படங்களை விடவும், கை நிறைய சம்பளமாக வாங்கினார். அந்தப் பணத்தைத் திரும்பவும் சினிமாவிலேயே முதலீடு செய்தார்.
தனது உதவியாளரான சிவபாலன் முத்துக்குமாரை இயக்குனராக அறிமுகப்படுத்தி, தனது நண்பரான கவினை நாயகனாக்கி 'பிளடி பெக்கர்' படத்தைத் தயாரித்தார். படம் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் நெல்சன். ஆனால், தீபாவளி போட்டியில் வெளிவந்த 'அமரன்' படத்துடன் போட்டி போட முடியாமல், படமும் மிகச் சுமாராக இருந்ததால் தோல்வியைத் தழுவியது.
நெல்சனை நம்பி படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. தன்னை நம்பி படத்தை வாங்கிய அவர்களுக்கு நஷ்டத் தொகை தந்து சரிக்கட்ட நெல்சன் முடிவெடுத்திருக்கிறாராம். ரஜினிகாந்த் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே இப்படி நஷ்டத்தைத் திருப்பித் தந்திருக்கிறார்கள்.
தியேட்டர் வெளியீட்டில் படம் நஷ்டம் என்றாலும், சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை ஆகிய வருமானம் மூலம் தயாரிப்பாளரான நெல்சனுக்கு எந்த நஷ்டமும் இல்லையாம். தனது அடுத்த தயாரிப்பை மிகவும் கவனமுடன் செய்வாரா நெல்சன், அல்லது 'ஜெயிலர் 2' இயக்கும் வேலை போதும், என அந்தப் பக்கம் போய்விடுவாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.