என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

சூர்யா, திஷா படானி, பாபி தியோல் மற்றும் பலர் நடிப்பில் நாளை(நவ., 14) வெளியாக உள்ள படம் 'கங்குவா'. இப்படத்தின் வெளியீட்டை எதிர்த்து தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தொடரப்பட்டது. அதில் ரிலையன்ஸ் நிறுவனம் போட்ட வழக்கில் கடந்த வாரம் பணம் செலுத்தப்பட்டு வழக்கு முடிவுக்கு வந்தது.
அடுத்து சென்னை உயர்நீதிமன்ற சொத்தாட்சியர் தொடர்ந்த வழக்கில் இன்று நவம்பர் 13ம் தேதிக்குள் 20 கோடியை செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 'தங்கலான்' பட வெளியீட்டிற்கு முன்பாக வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் 'கங்குவா' வெளியீட்டிற்கு முன்பு ஒரு கோடியை செலுத்தியதால் படத்தை வெளியிட தடையில்லை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 11ம் தேதிக்குள் 3 கோடி செலுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளார்கள். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ஏற்கெனவே 10 கோடியே 35 லட்ச ரூபாயை டெபாசிட் செய்ததையும் நீதிபதிகளில் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
பியூயல் டெக்னாலஜிஸ் தொடர்ந்த வழக்கில் அவர்களுக்கு வழங்க வேண்டிய அசல் தொகையில் மீதமுள்ள 1 கோடியே 60 லட்ச ரூபாயை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் செலுத்தியதால் அந்த வழக்கிலும் 'கங்குவா' பட வெளியீட்டிற்குத் தடையில்லை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால், வழக்குகளின் சிக்கல்களிலிருந்து விடுவிக்கப்பட்டதால் 'கங்குவா' படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகிறது.