மோசமான தோல்வியை சந்தித்த 'ஏக் தின்' | 'கருப்பு' ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா? | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே! | 'ஜனநாயகன்' பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்! | நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்! | ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி' | அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு | நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு | 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்… | சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கூலி'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.
இப்படத்தை அடுத்த வருடம் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் வியாழக்கிழமை விடுமுறை நாள். அதனால், முதல் வார இறுதி விடுமுறை நாட்களுடன் சேர்த்து நான்கு நாட்களில் அமோகமான வசூலைப் பெற முடியும்.
2025ம் ஆண்டு தனுஷ் இயக்கி, நடிக்கும் 'இட்லி கடை' படத்தை ஏப்ரல் 10ம் தேதி வெளியிட உள்ளதாகவும், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் நடிக்கும் 'தக் லைப்' படத்தை ஜுன் 5ம் தேதி வெளியிட உள்ளதாகவும் அறிவித்துவிட்டார்கள்.
ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டிற்கும், அடுத்து மே மாதம் கோடை விடுமுறைக்கும் படங்களை வெளியிட சில பெரிய படங்களின் தயாரிப்பார்கள் இப்போதே தேதிகளை ஆராய்ந்து வருகிறார்கள். இரண்டு பெரிய படங்களின் அறிவிப்புகள் வந்த நிலையில், மற்ற படங்களுக்கான அறிவிப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.