புஷ்பா 2 டப்பிங் ஜரூர் : ஆனால் ராஷ்மிகா முகத்தில் சோகம் | குபேரா படத்தின் முன்னோட்ட வீடியோவை வெளியிடும் மகேஷ் பாபு | யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படக்குழு மீது வழக்குப்பதிவு | ‛அமரன்' ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை | கங்குவா டிரைலர் - அஜித் கொடுத்த ரியாக்ஷன் | 'கங்குவா' வெளியீடு - வழக்கு சிக்கல்களுக்குத் தீர்வு | 'பிளடி பெக்கர்' நஷ்டத்தைத் திருப்பித் தரும் தயாரிப்பாளர் நெல்சன்? | மே 1 - தொழிலாளர் தினத்தில் ரஜினிகாந்தின் 'கூலி' ரிலீஸ்? | தள்ளிப்போகும் ‛வீர தீர சூரன்' பட ரிலீஸ் | பொங்கல் ரேசில் இணையும் பாலாவின் வணங்கான் |
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்கும் ஏதாவது ஒரு பட்டப் பெயர் உண்டு. ஏழிசை வேந்தர், புரட்சித்தலைவர், நடிகர் திலகம், காதல் மன்னன், லட்சிய நடிகர், சூப்பர் ஸ்டார், காதல் இளவரசன், ஆண்டவர், உலக நாயகன், புரட்சித் தமிழன், சுப்ரீம் ஸ்டார், இளைய திலகம், ஆக்ஷன் கிங், அல்டிமேட் ஸ்டார், தல, தளபதி, இளைய தளபதி, சின்ன தளபதி, புரட்சித் தளபதி, மக்கள் செல்வன் உள்ளிட்ட பல பட்டப் பெயர்கள் இங்கு வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஏன், சில நடிகைகளுக்குக் கூட பட்டப் பெயர்கள் உண்டு. புன்னகை அரசி, நடிகையர் திலகம், புன்னகை இளவரசி, லேடி சூப்பர் ஸ்டார் என சிலருக்கு உண்டு.
2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடிகர் அஜித் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தன்னை இனி 'தல' என அழைக்க வேண்டாம் எனவும், அஜித்குமார், அஜித், ஏகே என ஏதாவது ஒன்றைக் குறிப்பிட்டு அழைக்கலாம் எனவும் கேட்டுக் கொண்டார். அதிலிருந்து அவரை 'தல' என அழைப்பது வெகுவாகக் குறைந்துவிட்டது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தன்னை இனி, உலக நாயகன் என அழைக்க வேண்டாம். கமல்ஹாசன், கமல், கேஹெச் என அழைத்தால் போதுமானது என கேட்டுக் கொண்டுள்ளார். அவரது இந்த அறிக்கைக்கு வழக்கம் போல அவருடைய சில ரசிகர்கள் ஏற்க மறுத்தாலும் பலரும் வரவேற்றுள்ளனர்.
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களை இப்படி பட்டப் பெயர்களை வைத்து அழைத்து வந்ததில் மூன்று வருடங்களுக்கு முன்பே மாற்றத்தைக் கொண்டு வந்தவர் அஜித். அவரது வழியைப் பின்பற்றி இன்று கமல்ஹாசன் அதைத் தொடர்ந்துள்ளார்.
அஜித், கமல் வழியைப் பின்பற்றி மற்ற முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் அவருடைய ரசிகர்களை 'சூப்பர் ஸ்டார்' என்றும், விஜய், 'தளபதி' என்றும் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்வார்களா என்பதும் கேள்வியாக எழுந்துள்ளது.
'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்திற்குத்தான் சில வருடங்களுக்கு முன்பு பெரும் சண்டையும், சர்ச்சையும் நடந்தது. ரஜினி கூட பெருந்தன்மையாக அறிவிக்க வாய்ப்புள்ளது. ஆனால், இப்போது அரசியலில் இறங்கியுள்ள விஜய் 'தளபதி' என்று அழைப்பதை நிறுத்துங்கள் என்று சொல்ல வாய்ப்பேயில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலினை அவரது கட்சிக்காரர்கள் தளபதி என்று அழைப்பது வழக்கம். 'இளைய தளபதி' ஆக தன்னை குறிப்பிட்டு வந்த விஜய், திடீரென சில வருடங்களுக்கு முன்பு 'தளபதி' என மாற்றிக் கொண்டார். அப்போது திமுக.,வினர் அதற்கு பெரிய எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்போது விஜய் தீவிர அரசியலில் இறங்கி திமுக.,வை எதிர்க்கத் தொடங்கியுள்ள நிலையில் வரும் காலங்களில் 'தளபதி' என்ற பட்டத்திற்கு ஏதாவது பிரச்னைகளும், சர்ச்சைகளும் வரவும் வாய்ப்புள்ளது.