டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

என்.ராஜசேகர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மிஸ் யூ'. முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதை களத்தில் இப்படம் உருவாகிறது. இதில் சித்தார்த் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார். சஸ்டிக்கா ராஜேந்திரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
7 மைல்ஸ் பெர் செகண்ட் என்ற புதிய நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகின்றனர். ஒரு இளைஞன் தனக்கு பிடிக்காத ஒரு பெண்ணை காதலிக்கிறான். அது ஏன் என்பதன் படத்தின் கதை. இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. தற்போது இத்திரைப்படம் வருகின்ற நவம்பர் 29ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.