புஷ்பா 2 - நான்கு நாட்களில் 800 கோடி வசூல் | பிளாஷ்பேக்: சிகரெட் புகைத்த நாயகி | 'மெட்ராஸ்காரன்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் | பிளாஷ்பேக்: அண்ணன் தங்கை பாசம் பேசி, அழியா புகழ் வசனகர்த்தாவான ஆரூர் தாஸ் | சூர்யா 45 படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் விலகல் | சோஷியல் மீடியா ட்ரோலில் பாதிக்கப்படுவது நடிகைகள் தான் - வாணி போஜன் | மீண்டும் சீரியலில் 'மோதலும் காதலும்' சமீர்! | இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த டாப் 10 படங்கள் எது தெரியுமா...? | புதிய கார் வாங்கிய ஸ்வாதி கொன்டே! | ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் அணிலா! |
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கவிஞர், சமூக சேவகர் என பல முகங்களை கொண்டவர் பார்த்திபன். சென்னை நந்தனம் பகுதியில் இவரது அலுவலகம் உள்ளது. இதில் 6 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 4 பேர் உதவி இயக்குனர்கள்.
பார்த்திபன் தான் அணியும் தங்க சங்கிலி மோதிரம் போன்றவற்றை அலுவலகத்தில் கழற்றி வைத்து விட்டு வீட்டுக்கு செல்வார். வழக்கம் போல் அலுவலகத்தில் தனது அறையில் 12 சவரன் நகைகளை ஒரு பையில் வைத்துள்ளார். நேற்று முன்தினம் அலுவலகத்திற்கு வந்து நகைகளை பார்த்த போது அந்த நகைகளை காணவில்லை. இதுகுறித்து அலுவலகத்தில் பணியாற்றும் 6 பேரிடம் பார்த்திபன் கேட்டுள்ளார். அனைவரும் மறுத்துள்ளனர். இது தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் பார்த்திபன் அலுவலகம் மற்றும் அருகில் உள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். மேலும், அலுவலகத்தில் பணியாற்றும் 6 ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்திய போது, நடிகர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கிருஷ்ணகாந்த் என்பவர் 12 சவரன் நகைகளை திருடியது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் நகைகளை பறிமுதல் செய்தனர்.
பிறகு பார்த்திபனிடம் கிருஷ்ணகாந்த் மன்னிப்பு கேட்டுக்கொண்டதை தொடர்ந்து அவரை மன்னித்த பார்த்திபன் தனது புகாரை திரும்ப பெற்று கொண்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் போலீசார் கிருஷ்ணகாந்த் வேறு எங்கும் இதுபோல திருடி உள்ளாரா என்பது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.