புஷ்பா 2 - நான்கு நாட்களில் 800 கோடி வசூல் | பிளாஷ்பேக்: சிகரெட் புகைத்த நாயகி | 'மெட்ராஸ்காரன்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் | பிளாஷ்பேக்: அண்ணன் தங்கை பாசம் பேசி, அழியா புகழ் வசனகர்த்தாவான ஆரூர் தாஸ் | சூர்யா 45 படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் விலகல் | சோஷியல் மீடியா ட்ரோலில் பாதிக்கப்படுவது நடிகைகள் தான் - வாணி போஜன் | மீண்டும் சீரியலில் 'மோதலும் காதலும்' சமீர்! | இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த டாப் 10 படங்கள் எது தெரியுமா...? | புதிய கார் வாங்கிய ஸ்வாதி கொன்டே! | ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் அணிலா! |
ஒரு காலத்தில் ஆண்டுக்கு ஒரு ஐயப்பன் படங்களாவது வெளிவரும். ஐயப்ப விரத காலத்தில் வெளிவந்து வெற்றியும் பெற்று விடும். அப்படி ஒரு படம்தான் 'சரணம் ஐயப்பா'. தசரதன் என்பவர் இயக்கிய இந்த படத்தில் மனோரமாவின் மகன் பூபதி, ராதாவி, ஜெயபாரதி, விஜயன், ஜெய்சங்கர், மனோரமா, சரத்பாபு, சுருளிராஜன் உள்ளிட்ட பலர் நடித்தனர். சந்திரபோஸ் இசை அமைத்திருந்தார்.
1980ல் வெளிவந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை இயக்கிய தசரன் 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் கமல்ஹாசனுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இதனால் நட்புக்காக இந்த படத்தில் நடித்ததுடன் 'அண்ணா வாடா தம்பி வாடா' என்ற பாடலையும் பாடிக் கொடுத்தார் கமல். படம் தயாரானவுடனேயே தமிழ்நாடு முழுக்க விற்பனையாகி விட்டது. படம் 32 நாட்களில் படமாக்கப்பட்டது.
படத்தின் பூஜையின்போதே இயக்குனர் தசரதன் படம் வெற்றி பெற்றால் சபரிமலைக்கு வீட்டில் இருந்தே பாதயாத்திரையாக வருவதாக வேண்டுதல் செய்தார். அதன்பிடி எல்டாம்ஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து பாதயாத்திரையாக சபரிமலை சென்றார். படம் தயாரான அதே 32 நாட்களாக 520 கிலோ மீட்டர் நடந்தே பாத யாத்திரை செய்து சபரிமலையில் வழிபட்டு திரும்பினார்.