'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஹாலிவுட்டில் வெளியான வெப்சீரிஸான ‛சிட்டாடல்' ஹிந்தியில் ‛சிட்டாடல் ஹனி பனி' என்ற பெயரில் வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. வருண் தவான், சமந்தா முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். இருவரும் உளவாளியாக அதிரடி ஆக் ஷன் காட்டி உள்ளனர். இந்த வெப்சீரிஸை பல்வேறு நிகழ்வுகளில் சமந்தா புரமோஷன் செய்து வந்தார். அதன் ஒரு பகுதியாக ரசிகர்களுடன் வலைதளத்தில் சமந்தா கலந்துரையாடினார்.
ஒருவர், ‛சமீபத்திய படங்களின் தொடர் தோல்வி' குறித்து கேட்டார். அதற்கு, ‛‛ஒவ்வொரு முறையும் நான் நடிக்கும் வேடங்களில் சிறப்பாக செயல்படுவேன் என சொல்லிக் கொள்வேன். ஒவ்வொரு வேடமும் ஒவ்வொரு முறையும் சவலாகவே இருக்கும். கடந்த காலங்களில் தவறு செய்துள்ளேன். சில விஷயங்கள் சரியாக அமையவில்லை. அதனால் தோல்விகளை ஒப்புக் கொள்கிறேன்'' என்றார்.
மற்றொருவர், ‛உடல் எடையை அதிகரிக்கும்படி' கேட்டார். அதற்கு சமந்தா, ‛‛நான் மயோசிடிஸ் நோயால் பாதிக்கபட்டுள்ளேன். மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி உணவு எடுக்கிறேன். இந்த பிரச்னையால் என் உடையில் ஏற்ற இறக்கங்களை சந்திக்கிறேன். தயவு செய்து மற்றவர்களின் குறைகளை கண்டுபிடிப்பதை நிறுத்துங்கள். நாம 2024ல் இருக்கிறோம்'' என காட்டமாக பதிலளித்தார்.