பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் |
சூர்யா நடித்திருக்கும் 44-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த சூர்யா 44வது படத்தை அடுத்த ஆண்டு மார்ச் 28ம் தேதி வெளியிடுவதற்கு திட்டமிட்டு வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். அந்த வகையில் சூர்யாவின் கங்குவா நவம்பர் 14ம் தேதி திரைக்கு வரும் நிலையில் அதையடுத்து நான்கு மாத இடைவெளியில் சூர்யா 44வது படம் வெளியாக உள்ளது.
அதேபோல், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 45வது படமும் அடுத்த ஆண்டில் வெளியாகிறது. அந்த வகையில், 2025ம் ஆண்டில் சூர்யா நடிப்பில் இரண்டு படங்கள் திரைக்கு வருகிறது. இந்த படங்களுக்கு பிறகு மாரி செல்வராஜ், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இயக்கும் படங்களிலும், வாடிவாசல் படத்திலும் அடுத்தடுத்து நடிக்கப் போகிறார் சூர்யா.