செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
கேரளாவில் முன்னணி மாடல் அழகியாக இருந்தவர் ரோஸ்மின். 2022ல் 'மிஸ் மலபார்' பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து 2023ல் 'மிஸ் குயின் கேரளா' போட்டியில் 2வது இடமும், மிஸ் சவுத் இந்தியா 2023 போட்டியில் மூன்றாவது இடமும் பிடித்தார். பின்னர் சினிமாவுக்கு வந்தார். திலீப் நடித்து சமீபத்தில் வெளியான 'பவி கேர் டேக்கர்' படத்தில் அறிமுகமானார் ரோஸ்மின். தற்போது காந்தி கிருஷ்ணா இயக்கும் 'பிரேக் பாஸ்ட்' படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.
தமிழ் பட அனுபவம் குறித்து அவர் கூறியிருப்பதாவது: சில அனுபவங்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. என்னுடைய கரியரில் முக்கியமான கட்டத்தில் இருப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன். கோலிவுட்டில் எனது பயணத்தைத் தொடங்கி வைக்கும்படியான இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணா சாருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் எனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்தது மட்டுமல்லாது நிறைய புது விஷயங்களையும் கற்றுக் கொண்டேன். என்றார்.