2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படம் வருகிற 14ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படம் 38 மொழிகளில் வெளியாகிறது. சூர்யா தமிழில் பேசிய டப்பிங் குரலை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மற்ற மொழிகளுக்கும் பயன்படுத்தி உள்ளார்கள். தற்போது இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார் சூர்யா.
அப்போது அவரிடத்தில் பாலிவுட் என்ட்ரி குறித்து மீடியாக்கள் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், ''ஏற்கனவே 'சூரரைபோற்று' படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'சர்பிரா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த நான் தற்போது ஹிந்தியில் 'கர்ணா' என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதன் பிறகு மாறுபட்ட கதைகளில் ஹிந்தியில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன்,'' என்று தெரிவித்திருக்கிறார் சூர்யா.