‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி |
நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவை கடந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவர் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து அவர் தெலுங்கில் நடித்து வெளிவந்த மகாநடி, சீதாராமம், லக்கி பாஸ்கர் ஆகிய படங்களும் வெற்றி பெற்றுள்ளது.
இதனால் இவரை வைத்து தெலுங்கில் படங்களை உருவாக்க தெலுங்கு பட நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது புதிதாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார் துல்கர் சல்மான். இதனை கல்கி படத்தை தயாரித்த வைஜயந்தி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கு ' ஆகாசம் லோ ஒக்க தாரா' என தலைப்பு வைத்துள்ளனர். மேலும் இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சாய் பல்லவி இணைந்து நடிக்கவுள்ளார். இவர்கள் ஏற்கனவே 'காளி' என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.